சின்னத்திரையில் ரீ என்ட்ரி கொடுத்த ஜெயம் பட நடிகை..!!

 
1

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை கல்யாணி. இவர் அள்ளித் தந்த வானம் படத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து நடனமாடிய ‘சென்னை பட்டணம் எல்லாம் கட்டணம்’ பாடல் மூலம் பிரபலமானார் . அதன்பிறகு ஜெயம் ரவி அறிமுகமான “ஜெயம்” படத்தில் நடிகை சதாவிற்கு தங்கையாக கல்யாணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அந்த கதாபாத்திரம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அதிக பரிட்சயமானார். பின்னர் நடிகை பூர்ணிதா கல்யாணி என்றே அழைக்கபட்டார். ஜெயம் படத்திற்கு பின்னர் பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்திலும் ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்திருந்தார்.திரைப்படங்களைத் தாண்டி பல சின்னத்திரை தொடர்கள்  ஆண்டாள் அழகர், பிரிவோம் சந்திப்போம், தாயுமானவன் போன்ற சீரியலைகளில் நடித்துள்ளார். விஜே பாவனாவுடன் இணைந்து ‘பீச் கேர்ல்ஸ்’ என்ற டாக் ஷோவையும் தொகுத்து வழங்கியிருக்கிறார்.

1

இவர் சிறு வயதில் இருந்தே 300 விளம்பரங்களுக்கு மேல் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த ரோஹித் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். பெங்களூரில் செட்டில் ஆன இவருக்கு நவ்யா என்ற மகளும் இருக்கிறார்.  திருமணத்திற்கு பின்னர் நடிப்புக்கு முழுக்கு போட்ட நடிகை கல்யாணி, ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காகத்தான் நடிப்பை விட்டு விலகியதாக கல்யாணி தெரிவித்தார்.

“பிரபல தனியார் தொலைக்காட்சியின் ப்ரோகிராமிங் ஹெட் ஒருவர் ஒரு நிகழ்ச்சி குறித்து ஆலோசிக்க இரவு நேரத்தில் பப்புக்கு வருமாறு அழைத்ததாகவும், அவரை வேறு இடத்தில் சந்திக்குமாறு கூறியதாகவும், அதனை பொருட்படுத்தாத அந்த நபர் சட்டென அந்த அழைப்பை துண்டித்துவிட்டதாகவும் கூறினார். மேலும் அதன் பிறகு தனக்கு வேறு நிகழ்ச்சிகளில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகளையும் அந்த நபர் பறித்துவிட்டார் எனவும், மேலும் திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக தன்னை அணுகிய இயக்குநர்கள் கூட  தங்கள் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்யுமாறு கோரியுள்ளனர் என்றும் கல்யாணி பகிரங்கமான குற்றச்சாட்டை முன்வைத்து,  தான் படங்களில் நடிக்காமல் போனதற்கு இதுதான் காரணம் எனவும் கல்யாணி ஓபனாக தெரிவித்தார்.இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. 

1

இந்நிலையில், நடிகையும் தொகுப்பாளினியுமான கல்யாணி மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்க போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன்4  நிகழ்ச்சியில் KPY பிரபலம் அமுதவாணன் உடன் இணைந்த நடுவராக செயல்பட உள்ளார், என தகவல் வெளியாகியுள்ளது.

From Around the web