அக்கா தம்பி பாசத்தின் கதை அம்சம் கொண்ட படத்தில் ஜெயம் ரவி..! 

 
1

சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களை இயக்கிய எம் ராஜேஷ் இயக்கத்தில் பிரதர் என்கிற படத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிக்க உள்ளார். அக்கா தம்பி பாசத்தின் கதை அம்சம் கொண்ட இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். பிரியங்கா மோகன், பூமிகா சாவ்லா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படமானது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரைக்கு வரவுள்ளது. மேலும் விவேகானந்த் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்ய, ஆஷிஷ் ஜோசப் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

இந்நிலையில் சற்று முன் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ள படத்தின் முதல் பார்வை (பர்ஸ்ட் லுக்) போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


நடிகர் ஜெயம் ரவி தற்போது நயன்தாராவுடன் இறைவன், கீர்த்தி சுரேஷ் உடன் ‘சைரன்’, கல்யாணி பிரியதர்ஷன், கீர்த்தி ஷெட்டி , வாமிகா கபி ஆகிய 3 நடிகைகள் நாயகிகளாக நடிக்கும் ‘ஜெனி’ மற்றும் எம் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web