பிரபல நடிகர் ஜெயம் ரவிக்கு 2வது திருமணமா? பயில்வான் சொல்வதென்ன..?
இதை தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட ஆர்த்தி, தனக்கு இந்த விவாகரத்து தொடர்பில் எதுவும் தெரியாது. இது ஜெயம் ரவி தன்னிச்சையாக எடுத்த முடிவு என்று சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். ஆனாலும் ஜெயம் ரவி அதற்குப் பிறகு வழங்கிய பேட்டியில் இரண்டு வீட்டாரும் பேசித் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆர்த்திக்கு இரண்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்று உண்மையை உடைத்து இருந்தார்.
இந்த விவகாரம் தொடர்ந்து வரும் நிலையில் ஜெயம் ரவியுடன் ஆர்த்தி பேசுவதற்கான முயற்சியில் ஈடுபட்டதாகவும் ஆனால் அது பயனளிக்கவில்லை எனவும் கூறப்பட்டது. ஜெயம் ரவி தற்போது தனது கேரியரில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றார்.
இந்த நிலையில், மும்பையில் வசித்து வரும் ஜெயம் ரவி இரண்டாவது திருமணம் செய்வாரா? என்ற பேச்சு எழுந்துள்ளது. தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றார்கள். ஒருவேளை ஆர்த்தி தனது அம்மாவை விட்டு ஜெயம் ரவி வீட்டுக்கு வந்து வாழ்ந்தால்தான் இருவரும் சேர்ந்து வாழ்வதற்கான வாய்ப்பு உள்ளது.
எனவே இப்படிப்பட்ட சூழ்நிலையில் இரண்டாவது திருமணம் குறித்து நாம் எதுவும் பேச வேண்டாம் என்று பயில்வான் தெரிவித்துள்ளார்.