மீண்டும் இயக்குநர் அஹமத்துடன் கைக்கோர்க்கும் ஜெயம் ரவி..!

 
இயக்குநர் அஹமத் மற்றும் ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவி நடித்து வரும் படங்களில் ஒன்றை இயக்குநர் அஹமத் இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு ‘ஜன கன மன’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பரவல் சூழலால் படத்தின் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. 

தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, ஜெயம் ரவி அடுத்ததாக மீண்டும் அஹமத் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார் என்று தெரியவந்துள்ளது. ஜன கன மன படம் மூலம் ஏற்பட்ட நட்பின் காரணமாக இப்புதிய படம் சாத்தியமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

படத்தின் கதைகளம் பற்றி எந்தவித தகவலும் தெரியவில்லை. ஆனால் நிச்சயம் பார்வையாளர்களுக்கு இந்த படம் புதிய அனுபவத்தை தரும். மேலும் அந்த படத்தை ‘ஜன கன மன’ படத்துக்கு முன்னதாகவே முடித்துவிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

அதை தொடர்ந்து ஜன கன மன படத்திற்கான பணிகள் முடிக்கப்பட்டு வெளிவரவுள்ளது. கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன், இந்த புதிய படம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


 

From Around the web