ஜெயம் ரவி, நயன்தாராவின் ‘இறைவன்’ ரிலீஸ் தேதி இதுதான்..!!
தமிழில் என்றென்றும் புன்னகை, மனிதன் போன்ற படங்களை இயக்கி கவனமீர்த்தவர் அகமத். இவருடைய இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் படம் தான் இறைவன். இப்படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாகவும் நயன்தாரா கதாநாயகியாகவும் நடித்து வருகின்றனர்.
தனி ஒருவன் படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் ஜெயம் ரவி, நயன்தாரா இணைந்து நடித்து வருவதால் இப்போதே படத்துக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஃபேஷன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
இப்படியொரு படம் தயாராகி வருவது பெரும்பாலானோருக்கு தெரியாது. சத்தமே இல்லாமல், அதேசமயத்தில் விறுவிறுப்பாகவும் இந்த படத்துக்கான படப்பிடிப்பு நடந்து வந்தது. தற்போது இறைவன் படத்துக்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி ஜூலை 14-ம் தேதி இறைவன் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநாளில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடித்துள்ள மாவீரன் படமும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.