கிருத்திகா உதயநிதி இயக்கும் படத்தில் ஜெயம் ரவி..?

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்துக்கு பிறகு வரிசையாக பல படங்களை கமிட் செய்து வைத்துள்ள ஜெயம் ரவி, கிருத்திகா உதயநிதி இயக்க்கும் படத்திலும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றன.
 
 
kiruthika udhanidhi

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தை தொடர்ந்து ஜெயம் ரவியின் சினிமா கெரியர் எங்கோ சென்றுவிட்டது. அவர் தற்போது இறைவன் மற்றும் சைரன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அவற்றில் இறைவன் படம் அடுத்ததாக வெளிவரவுள்ளது.

இதை தொடர்ந்து மேலும் பல படங்களுக்கான கதைகளை அவர் கேட்டு உறுதி செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் கிருத்திகா உதயநிதியின் படமும் ஒன்று என்று தகவல் வெளிவந்துள்ளது. இந்த படம் பெரும் பட்ஜெட்டில் தயாராகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

கதாநாயகியாக நித்யா மேனன் நடிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. அதேபோல படத்துக்கு இசையமைக்கு பணிகளை ஏ.ஆர். ரஹ்மான் மேற்கொள்ளவுள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தை ரெட் ஜெயிண்ட் நிறுவனமே நேரடியாக தயாரிக்க முடிவு செய்துள்ளதாம்.

விரைவில் இந்த படத்துக்கான அறிவிப்பு வெளியாகும் என சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

From Around the web