இணையத்தில் வைரலாகும் ஜெயம் ரவியின் ‘அகிலன்‘ பட பாடல்..!!

 
1

நடிகர் ஜெயம் ரவி தற்போது கல்யாண் இயக்கத்தில் ‘அகிலன்‘ படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடன் பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் துறைமுகம் பின்னணியில் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது.

தற்போது இப்படத்தின் ப்ரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படம்  வருகிற மார்ச் 10-ம் தேதி திரைக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தில் இருந்து “பொறக்கும் போதும் துரோகம் பண்ணு, இறக்கும் போது துரோகம் பண்ணு“ என்கிற ஒரு சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடல் முழுக்க ஜெயம் ரவியின் ஆக்சன் காட்சிகளாக இடம் பெற்றுள்ளன. தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வரும் இந்தபாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

From Around the web