இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘ப்ரதர்’ கிளிம்ஸ் வீடியோ வெளியீடு!

 
1

‘ப்ரதர்’ படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கிறது. ப்ரியங்கா அருள் மோகன் நாயகியாக நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, அச்யுத், ‘கேஜிஎஃப்’, ‘புஷ்பா’ புகழ் பிரபல தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

‘ப்ரதர்’ திரைப்படத்துக்காக ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’க்குப் பிறகு இயக்குநர் ராஜேஷும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும் மீண்டும் இணைந்துள்ளதால் இதன் பாடல்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒளிப்பதிவை விவேகானந்த் சந்தோஷம் கையாள்கிறார். குடும்ப கதையம்சம் கொண்ட படமாக இது இருக்கும் என தெரிகிறது.

இந்நிலையில் இப்படத்தின் கிளம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 38 நொடிகள் மட்டுமே ஓடும் வீடியோவை பொறுத்தவரை பின்னணியில் பாடல் ஒலிக்க திருமண நிகழ்வு ஒன்றில், பிரியங்கா மோகன் நடனமாடுவது போல காட்சிப்படுத்தப்படுள்ளது. மேலும், ஜெயம் ரவியும் இடம்பெற்றுள்ள இந்த வீடியோ ரசிகர்களிடையே ஹாரிஸ் ஜெயராஜின் ‘கம்பேக்’ எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

From Around the web