ஜெயம் ரவி திரைப்படம் தியேட்டரில் வெளியாகாதாம்... ரசிகர்கள் அதிர்ச்சி..!  

 
1

சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில் ஜெயம்ரவி நடித்திருக்கும் படம் ‘சைரன்’. இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். யோகிபாபு, சமுத்திரகனி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.குடும்ப அம்சங்களுடன் ஆக்ஷன் திரில்லராக பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஜெயம்ரவி இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

செல்வ குமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது.இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ‘சைரன்’ திரைப்படம் வருகிற 26-ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த செய்தி சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.”,

From Around the web