ஜீ தமிழ்க்கு செல்லும் ராஜா ராணி சந்தியா..!!
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் 'ராஜா ராணி 2' சீரியல் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. ஏராளமான பார்வையாளர்களை கொண்ட இந்த சீரியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் ஏற்பட்டு பரபரப்பாக நகர்ந்து வருகிறது. இந்த சீரியலில் சந்தியா கேரக்டரில் ஆல்யா மானசாவும், சரவணன் கேரக்டரில் சித்துவும் முதலில் நடித்து வந்தனர்.
ஆனால் முதன்மை கேரக்டரில் நடித்து வரும் ஆலியா மானசா, கர்ப்பமானதால் சீரியலில் இருந்து விலகினார். அதனால் அவருக்கு பதிலாக சென்னை மாடல் அழகியான நடிகை ரியா, புதிய சந்தியாவாக நடித்து வந்தார். துணிச்சல் மிக்க ஐபிஎஸ் கதாபாத்திரத்தில் ரியா நடித்து மிரட்டி இருந்தார்.
இந்நிலையில் நடிகை ரியா சீரியலில் இருந்து விலகியுள்ளதாக சில தினங்களுக்கு முன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிப்பரப்பாக உள்ள புதிய சீரியல் ரியா தோன்றவுள்ளார். சூப்பர் ஹிட் சினிமா படமான ‘சண்டக்கோழி’ என்ற பெயரில் இந்த சீரியல் ஒளிப்பரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.