மீண்டும் ஓ.டி.டி-க்கு வரும் ஜீத்து ஜோசப் மற்றும் மோகன்லால்..!

 
ஜீத்து ஜோசப் மற்றும் மோகன்லால்

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மூன்றாவது முறையாக மோகன்லால் நடிக்கும் 12-த் மேன் படம் ஓ.டி.டி-யில் வெளியிட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

மலையாள சினிமாவின் வெற்றிக் கூட்டணியாக இருக்கும் மோகன்லால் மற்றும் ஜீத்து ஜோசப் மூன்றாவது முறையாக இணைந்து உருவாக்கியுள்ள படம் ‘12-த் மேன்’. இந்த படமும் தனக்கே உரிதான த்ரில்லர் கதையமைப்பில் இயக்கியுள்ளார் ஜீத்து ஜோசப்.

சமீபத்தில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்தன. அதை தொடர்ந்து இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் துவங்கி வருகின்றன. இந்நிலையில் இப்படம் ஓ.டி.டி-யில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்த ‘த்ரிஷ்யம் 2’ படம் கடந்த பிப்ரவரி மாதம் ஓடிடியில் வெளியானது. சூரரைப் போற்று அடுத்து இந்த திரைப்படம் தேசியளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web