கொரோனாவால் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளும் ஜெனிஃபர்..!

 
நடிகை ஜெனிஃபர்
ஏற்கனவே 13 வயதில் மகன் இருக்கும் நிலையில் 13 ஆண்டுகள் கழித்து இரண்டாவதாக குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து நடிகை ஜெனிஃபர் மனம் திறந்து பேசியுள்ளார்.

சினிமாவில் கதாநாயகியாக நடித்து வந்த ஜெனிஃபர் உரிய வாய்ப்புகள் இல்லாததால் டிவி பக்கம் ஒதுங்கினார். பல்வேறு தொலைக்காட்சி சீரியல்களில் அவர் நடித்தாலும், விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு வரவேற்பை பெற்று தந்தது.

இந்நிலையில்  அவர் கர்ப்பம் அடைந்ததால் சீரியலில் நடிக்காமல் விலகினார். இதுகுறித்து வீடியோ வெளியிட்ட அவர், கர்ப்பமாக இருப்பதால் தொடரில் நடிக்க முடியவில்லை என்று கூறினார். இவருக்கு ஏற்கனவே 13 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இதனால் பலரும் தாமதமாக இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்வது என அவரிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதற்கும் வீடியோவில் பதிலளித்துள்ள ஜெனி, நான் கர்ப்பமாக இருப்பதில் என் மகனுக்கு தான் அதிக மகிழ்ச்சி. எனக்கு ஒரு தங்கச்சி பாப்பா வேண்டும் என்று எப்போதும் கேட்பான். அவனுக்கு துணையாக யாராவது வேண்டும் என்பதற்காக இந்த முடிவெடுத்தேன். மேலும் 13 வருடங்களாக இரண்டாம் குழந்தையை தள்ளிவைத்து வந்தேன். அதற்கு பின் கொரோனாவில் என்ன நடக்கும்னு தெரியாது அப்போதுதான் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தேன் என்று ஜெனிஃபர் வீடியோவில் தெரிவித்துள்ளார். 

From Around the web