'பாக்கியலட்சுமி’ தொடரில் இருந்து விலகிய ஜெனிஃபர்- களமிறங்கும் பிக்பாஸ் பிரபலம்..!

 
பாக்கியலட்சுமி தொடரில் நந்திதா

தமிழில் தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் வரவேற்பு பெற்ற ‘பாக்கியலட்சுமி’ தொடரில் இருந்து முக்கிய பிரபலம் விலகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ தொடர் சமீபமாக பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. சதீஷ், சுசித்திரா, விஷால் உள்ளிட்டோர் நடித்து வரும் இந்த தொடரில் நந்திரா ஜெனிஃபர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இவருடைய ராதிகா என்கிற கதாபாத்திரத்திற்கு பெரிய ரசிகர் வட்டம் உண்டு. இந்நிலையில் சில தனிப்பட்ட காரணங்களினால் அந்த தொடரில் இருந்து அவர் விலகிவிட்டார். இதுதொடர்பாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர், பாக்கியலட்சுமி தயாரிப்புக் குழுவை மிகவும் மிஸ் செய்வதாக தெரிவித்துள்ளார்.

தற்போது அவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் பிக்பாஸ் புகழ் ரேஷ்மா நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே சன் டிவியில் நடித்து வந்த சீரியலில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து அவர் பாக்கியலட்சுமி தொடருக்குள் களமிறங்கவுள்ளார்.

அதேபோல நடிகை நந்திரா ஜெனிஃபரும் பிரபல தொலைக்காட்சியில் தயாராகும் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் பாக்கியலட்சுமி தொடரில் இருந்து நந்திரா ஜெனிஃபர் வெளியேறியுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

From Around the web