ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

தமிழ் சினிமாவில் ஒரே படத்தில் உச்சத்தை தொட்ட இயக்குநர் என்றால் அது கார்த்திக் சுப்புராஜ் தான். அவருடைய இயக்கத்தில் வெளியான ‘பீட்சா’ படம் தேசியளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதை. இதையடுத்து அவர் இயக்கும் ஒவ்வொரு படங்களும் பெரும் எதிர்பார்ப்பை பெற்றன.
ஆனால் கார்த்திக் சுப்புராஜுக்கு அதுக்கு பிறகு தொடர் தோல்விகள் தான் மிஞ்சின. எனினும், கடந்த 2014-ம் ஆண்டு அவருடைய இயக்கத்தில் வெளியான ‘ஜிகர்தண்டா’ திரைப்படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. அதில் நடித்த கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தேசிய விருது கூட அறிவிக்கப்பட்டது.
அப்படத்துக்கு பிறகும் மகான், ஜகமே தந்திரம் என தொடர் தோல்விகளை அவர் சந்தித்து வருகிறார். தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு ஜிகர்தண்டா படத்தின் இரண்டாவது பாகத்தை அவர் தயாரித்துள்ளார். இதனுடைய டீசரை கூட படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.
இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார், எஸ். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். படப்பிடிப்பு பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.