’ஜித்தன்’ ரமேஷ் நினைவிருக்கா..? இப்போ எப்படியிருக்கார் பாருங்க..!!
 

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜித்தன் ரமேஷ் மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கியுள்ளார். அவர் நடிப்பில் உருவாகி வரும் ‘ரூட் நெம்பர் 17’ படப்பிடிப்பு தென்காசியில் நடந்து வருகிறது. 
 
jithan ramesh

நடிகர் ஜீவான் உடன் பிறந்த சகோதரரும், சூப்பர் குட் ஃப்லிமிஸ்  நிறுவனத்தின் மூத்த அதிகாரியுமான ‘ஜித்தன்’ ரமேஷின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனமீர்த்துள்ளனர்.

கடந்த 2004-ம் ஆண்டு நடிகை ராதிகாவின் தயாரிப்பில் வெளியான படம் ‘ஜித்தன்’. இந்த படம் மூலம் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சூப்பர் குட் ஃப்லிம்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர்.பி. சவுத்ரியின் மூத்த மகன் ரமேஷ் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன், வசூலிலும் முதன்மையாக அமைந்தது.

jithan ramesh

அதையடுத்து ஜித்தன் ரமேஷ் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். மது, ஜெர்ரி, மதுரை வீரன், ஒஸ்தி, ஜித்தன் 2 என வரிசையாக நடித்தார். எனினும் படங்கள் பெரியளவில் வெற்றி பெறாமல் போனதால், ஜித்தன் ரமேஷ் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.

நீண்ட மாதங்கள் கழித்து கடந்த 2020-ம் ஆண்டு ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று கவனமீர்த்தார். இதன்மூலம் கிடைத்த புகழை வைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க அவர் ஆயத்தமாகி வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது நடிக்க ஒப்பந்தமாகியுள்ள படம் ‘ரூட் நெம்பர் 17’.

jithan ramesh

இந்த படத்தில் ஜித்தன் ரமேஷின் கெட்-அப் சார்ந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தென்காசியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் மொத்தம் 22 நாட்கள் குகையில் மட்டுமே ஷூட்டிங் நடத்தியுள்ளனர். மிகவும் ரிஸ்க் எடுத்து பல காட்சிகளில் ஜித்தன் ரமேஷ் நடித்துள்ளார். அவருடைய கெட்-அப் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மிகவும் மிரட்டலாக உள்ளது. இந்த போஸ்டரை பார்க்கும் பலர் ஜித்தன் ரமேஷுக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.
 

From Around the web