திரையரங்கில் பட்டைய கிளப்பிய ஜோ படம் ஒடிடியில் ரிலீஸ்..! எப்போ தெரியுமா ? 

 
1

ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ஜோ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் நடிகர் ரியோ. இப்படம் நவம்பர் 24 ஆம் தேதி ரிலீசாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.3 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வசூல் ரீதியாக 7 கோடி வரை வசூல் செய்து மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கிறது.

மேலும் தமிழ் சினிமாவில் சொல்லப்படாத காதல் கதையாக அமைந்து எதிர்பாராத கிளைமாக்ஸ் காட்சியுடன் இப்படம் அமைந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் OTT ரிலீஸ் குறித்து அப்டேட் கிடைத்துள்ளது. 

படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது எனவும் படம் டிசம்பர் 22-ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனவும் கடந்த ஆண்டே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால், அறிவித்தது போல படம் வெளியாகவில்லை.

ஏனென்றால், நாட்கள் கடக்க கடக்க படத்திற்கு திரையரங்குகளில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜோ திரைப்படம் வரும் ஜனவரி 15-ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1

From Around the web