ஜான் கொக்கன் - பூஜா தம்பதிக்கு குழந்தை பிறந்தது..!!
தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் வில்லனுக்கு பின்னால் இருக்கும் அடியாள் கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் ஜான் கொக்கன். பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
அதன்மூலம் புகழ் வெளிச்சத்தில் வந்த ஜான் கொக்கன், சமூகவலைதளத்தில் தன்னை அஜித்தின் தீவிர ரசிகராக அடையாளப்படுத்திக் கொண்டார். இதன்மூலம் அஜித் நடிப்பில் வெளியான ‘துணிவு’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார்.
இவருடைய மனைவி பூஜா ராமசந்திரன் தமிழில் பிரபலமான வி.ஜே-வாக உள்ளார். மனைவி பூஜா கர்ப்பமாக இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூகவலைதளங்களில் ஜான் கூறி இருந்தார். இப்போது இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு அவர்கள் கியான் கொக்கன் என்று பெயரிட்டுள்ளனர். இதையடுத்து இருவருக்கும் பலர் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.