லியோ படத்தில் மற்றொரு பிரபலம்- இவரும் வந்துட்டாரா..??

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தில் ஏற்கனவே பல பிரபலங்கள் நடித்து வரும் நிலையில், மேலும் ஒரு பிரபல நடிகர் புதிய வரவாக படத்தில் நடிக்கிறார்.
 
joju george

விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இதில் த்ரிஷா, அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த், கவுதம் மேனன், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ் போன்ற நடிகர்கள் நடித்து வருகின்றனர். இதுதவிர, சீரியல் மற்றும் சமூகவலைதள பிரபலங்கள் சிலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளனர்.

இந்த வரிசையில் மலையாள சினிமாவின் கொண்டாடப்படும் நடிகராஜ ஜோஜு ஜியார்ஜ் லியோ படத்தில் புதிய வரவாக இணைந்துள்ளார். கதைப்படி அவர் விஜய்யின் உடன் பிறந்த சகோதரனாக நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. இவர் படத்தில் சில நிமிடங்கள் மட்டுமே வருவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு எப்போதுமே கேரள நடிகர்கள் மீது தனி ஈர்ப்பு உண்டு. அவருடைய முதல் படமான மாநகரத்தை தவிர, மற்ற எல்லா படங்களிலும் மலையாள நடிகர்கள் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கைதி படத்தில் நரேன், ஹரீஷ் பேரடி மற்றும் ஹரீஷ் அடைக்கலம் நடித்துள்ளனர்.

விக்ரம் படத்தில் ஃபகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராமன், செம்பன் வினோத் ஜோஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தற்போது அதே ஃபார்மூலாவை தனது லியோ படத்திலும் லோகேஷ் கனகராஜ் பின்பற்றியுள்ளார். லியோ படத்தில் ஃபகத் பாசி, நரேன், மேத்யூ தாமஸ் உள்ளிட்டோருடன் ஜோஜூ ஜியார்ஜ் சேர்ந்து நடிக்கின்றனர். 

From Around the web