தமிழில் இருந்து தெலுங்குக்கு போகும் ஜோஜு சார்ஜ்- அதுவும் இப்படி.!!

மலையாளத்தில் முன்னணி நடிகரான ஜோஜு சார்ஜ், தமிழை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நடிக்கிறார். அவர் நடிக்கும் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
 
 
ஜோஜு ஜார்ஜ்

தமிழில் ‘ஜகமே தந்திரம்’ படத்தில் லண்டன் வில்லனாக நடித்த ஜோஜு சார்ஜ், அடுத்ததாக இன்னும் பெயரிடப்படாத என்கிற படம் மூலம் தெலுங்கு சினிமாவில் வில்லனாக அறிமுகமாகிறார்.

இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீகாந்த் ரெட்டி இயக்கியுள்ளார். சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தில் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் மற்றும் ஸ்ரீலீலா ஹீரோ ஹீரோயினாக நடிக்கின்றனர். இப்படத்தில் ஜோஜு செங்கா ரெட்டி என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடைய கதாபாத்திரத்துடன் கூடிய போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. 

dhanush

அவருடைய ஃபர்ஸ்ட் லுக் தெலுங்கு ரசிகர்களை மட்டுமில்லாமல் மலையாள ரசிகர்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது. முன்னதாக மலையாளம் தவிர தமிழில் மட்டும் இதற்கு முன் ஜோஜு ஜார்ஜ் நடித்துள்ளார். தமிழில் அவரது படங்களில் ஜகமே தந்திரம், புத்தம் புது காலை மற்றும் பஃபூன் போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும். 


 

From Around the web