ஆர்.ஆர்.ஆர் படத்துக்கு பிறகு ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படம் இதுதான்..!!

தெலுங்கில் வெளியான ஆர்.ஆர்.ஆர் படத்துக்கு பிறகு ஜூனியர் என்.டி.ஆர் தேசியளவில் புகழடைந்துவிட்டார். இதனால் அவருடைய அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பு ஒவ்வொரு சினிமா ரசிகனிடமும் அதிகரித்துக் காணப்படுகிறது.
அப்போது தான் கொரட்டலா சிவா இயக்கும் படத்தில் கமிட்டானார் ஜூனியர் என்.டி.ஆர். கே.ஜி.எஃப் பட இயக்குநர் பிரசாந்த் நீல் உடன் இணைவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை அளித்தது.
இதையடுத்து பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக அறிவிக்கப்பட்டார். மேலும் பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டன. இதன்காரணமாக என்.டி.ஆர் 30 படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் துவங்கியது.
Happy Birthday sir @tarak9999
— Prashant Neel (@Prashantneell) May 20, 2023
Meet you soon..........#NTR31 pic.twitter.com/xEaTYlbZ9y
இந்நிலையில் ஜூனியர் என்.டி.ஆரின் 40-வது பிறந்தநாளை முன்னிட்டு, படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி என்.டி.ஆர் 30 படத்துக்கு ‘தேவரா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை யுவசுதா ஆர்ட்ஸ், என்.டி.ஆர் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கும் இப்படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு சைஃப் அலி கானை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளது. படத்தின் தலைப்புடன், ஜூனியர் என்.டி.ஆரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.