வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் ஜூனியர் என்டிஆர் ..?

 
1

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ நடிப்பில் வெளிவந்த ‘விடுதலை‘ திரைப்படம் தமிழில் அமோக வரவேற்பை பெற்றது. தெலுங்கில் இந்தப்படம் வரும் ஏப்ரல் 15 அன்று டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. அதற்காக இன்று விடுதலை செய்தியாளர் சந்திப்பில் கலந்த கொண்டார் வெற்றிமாறன். இந்நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது, “ ஆடுகளம் படத்திற்கு பிறகு வடசென்னை படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க நடிகர் அல்லு அர்ஜுனை சந்தித்தேன். ஆனால் ஒரு சில காரணங்களால் அப்படத்தில் அவர் நடிக்கவில்லை.

அந்த கதாபாத்திரத்தையும் நான் நீக்கி விட்டேன். கொரோனோ லாக்டவுன் காலகட்டத்தில் மகேஷ் பாபுவுடன் நிறைய கதைகள் பேசினேன். ஆனால் அது எதுவும் அடுத்த கட்டத்திற்கு செல்லவில்லை. நான் ஸ்டார்க்காகவோ  காம்பினேஷன்காக படம் பண்ண மாட்டேன். கதைக்காக படம் பண்ணுவேன். நான் யோசித்த கதைகளில் ஒரு கதையில் ஜூனியர் என்டிஆர் மாதிரி ஸ்டார் தேவைப்படுகிறது. இப்போது ஜூனியர் என்டிஆர்  உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கண்டிப்பாக படம் பண்ணுவேன். ஆனால் அதற்கு நேரம் ஆகும்“ என்று அவர் கூறியுள்ளார்.

From Around the web