ஜப்பானில் நிலநடுக்கத்தில் சிக்கி ஊர் திரும்பிய ஜூனியர் என்டிஆர் வெளியிட்ட பதிவு..! 

 
1

ஜப்பான் நாட்டின் ஹொன்ஷு தீவு உள்ளிட்ட பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் எற்பட்டது. அடுத்தடுத்து 7.2 ரிக்டர் முதல் 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், கடலுக்கு அடியில் மையம் கொண்டிருந்ததால் நோட்டோ உள்ளிட்ட கடற்கரையோரப் பகுதியில் தீவிர சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பிரபல நடிகர் ஜூனியர் என்டிஆர் வெளியிட்ட பதிவு இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் ஆஸ்கார் விருது பெற்ற ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் நடித்த ஜூனியர் என்டிஆர், தற்போது இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியாகும் ‘தேவரா’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
‘தேவரா’ படத்தின் புதிய போஸ்டரை ஜனவரி 1 ஆம் தேதி வெளியிட்ட தயாரிப்பாளர்கள், பர்ஸ்ட் லுக் ஜனவரி 8 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்தனர்.

‘தேவரா’ படத்தின் முதல் பாகம் ஏப்ரல் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தின் ஜூனியர் என்டிஆர் தவிர, ஜான்வி கபூர் மற்றும் சைஃப் அலி கான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அது மட்டும் இல்லாமல் ஹிருத்திக் ரோஷனுடன் வார் 2 படத்திலும் நடித்து வருகிறார்.

புதிய படங்களில் பிஸியாக நடித்து வரும், ஜூனியர் என்டிஆர் 2023 கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு ஜப்பானுக்கு சென்ற கடந்த ஒரு வாரமாக ஜப்பானில் இருந்துள்ளார்.

ஜூனியர் என்டிஆர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அடிக்கடி வெளிநாடு செல்வார்கள். இந்த ஆண்டு, அவர் தனது மனைவி லட்சுமி பிரணதி மற்றும் அவரது இரண்டு குழந்தைகளான அபய் மற்றும் பார்கவ் ஆகியோருடன் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்ட்டாட ஜப்பான் சென்றுள்ளார்.

இந்த நிலையில் ஜப்பான் நிலநடுக்கத்தில் சிக்கி அங்கிருந்து குடும்பத்தோடு பாதுகாப்பாக ஐதராபாத் வந்து சேர்ந்துள்ளார் ஜூனியர் NTR.

ஒரு வாரமாக ஐதராபாத்தில் இருந்தேன். இந்த நிலநடுக்கம் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாதிப்படைந்துள்ள மக்கள் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து கொள்வதாக கூறியுள்ளார்.


 


 

From Around the web