சர்ச்சைக்குரிய காட்சியில் ஜோதிகா.. வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..!
Mar 3, 2025, 07:05 IST

நடிகை ஜோதிகா திருமணத்திற்கு பின் படங்களில் நடிப்பதில் இருந்து விலகி தற்போது மீண்டும் நடிக்க தொடங்கி விட்டார்.தற்போது பாலிவுட் பக்கம் அதிகம் கவனம் செலுத்தி வரும் ஜோதிகா கடந்த ஆண்டு சைத்தான் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து, ஜோதிகா நடிப்பில் இந்த ஆண்டு Dabba Cartel என்ற வெப் தொடர் வெளியாகியுள்ளது.
நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளிவந்துள்ள இந்த வெப் தொடரில் பல முன்னணி நடிகைகள் நடித்துள்ளனர். அதில் ஒருவராக முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிகை ஜோதிகா நடித்துள்ளார்.
இந்நிலையில், Dabba Cartel வெப் தொடரில் சிகரெட் பிடிக்கும் காட்சியில் நடிகை ஜோதிகா நடித்துள்ளார். தற்போது, இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.