இணையத்தில் வைரலாகும் ஜோதிகா இமய மலை டிரெக்கிங் வீடியோ..!

 
நடிகை ஜோதிகா

சமீபத்தில் இன்ஸ்டா வலைதளத்தில் புதியதாக கணக்கு தொடங்கிய நடிகை ஜோதிகா, இமய மலையில் மலையேற்றம் சென்ற வீடியோவை பதிவிட்டுள்ளார்.

திருமணத்துக்கு பிறகு சவால் மிக்க கதாபாத்திரங்களில் நடித்து ஜோதிகா முத்திரை பதித்து வருகிறார். மேலும் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் அவர் சவாலாகவே எதிர்கொண்டு வருகிறார்.

மற்ற நடிகைகளை போல கணவர், குழந்தைகள், குடும்பம் என்றில்லாமல் பல்வேறு தரப்பட்ட நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். இது ஜோதிகாவுக்கு தமிழ் சினிமாவில் தனித்துவத்தை சேர்க்கிறது.அந்த வகையில் சுதந்திர தினத்தன்று இமய மலையில் மலையேற்றம் செய்த வீடியோவை இன்ஸ்டாவில் தற்போது பதிவிட்டுள்ளார் ஜோதிகா. இது நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதுவரை இந்த வீடியோவை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இதன்மூலம் சினிமா துறையில் நடிகைகளுக்கு புதிய முன்னுதாரணத்தை ஜோதிகா வகுத்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

From Around the web