ஒரு மில்லியன் ஃபாலோயர்ஸுன் இன்ஸ்டாவில் எண்ட்ரி கொடுத்த ஜோதிகா..!

 
ஜோதிகா

நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிராமில் புதியதாக கணக்கு தொடங்கிய ஒரு மணிநேரத்தில் அவரை 10 லட்சம் பேர் ஃபோலோயர்ஸுகள் குவிந்துள்ளனர்.

திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் ஜோதிகா, பல ஆண்டுகளாக முன்னணி நடிகைகளுக்கான வரிசையில் இருக்கிறார். கதாநாயகியை மையப்படுத்திய படங்கள், கமர்ஷியல் படங்கள் என அனைத்து ஜானர்களிலும் நடிக்கிறார்.

தொடர்ந்து வெற்றி பெறும் படங்களில் நடித்து வரும் ஜோதிகா, முதன்முறையான சமூக ஊடகத்தில் கால்பதித்துள்ளார். ஜோதிகா என்கிற பெயரில் இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக கணக்கு தொடங்கியுள்ளார்.

”எல்லோருக்கும் வணக்கம்! சமூக ஊடகங்களில் முதல் முறையாக! எனது லாக்டவுன் நாட்குறிப்புகளிலிருந்து நிறைய தகவல்களைப் பகிர்ந்து கொள்ள கணக்கு துவங்கியுள்ளேன்" என்று தெரிவித்ததுடன் இமாலய மலைகளுக்கு விசிட் அடித்த புகைப்படங்கள் சிலவற்றை தன்னுடைய முதல் பதிவாக போஸ்ட் செய்துள்ளார்.

From Around the web