சமூக வலைத்தளத்தில் இளம் பெண்கள் வாழ்க்கை மையமாக வைத்து உருவாகும் "காத்து வாக்குல ஒரு காதல்"..!

 
1

எழில் இனியன் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘காத்து வாக்குல ஒரு காதல். இப்படத்தின் கதை, திரைக்கதை, பாடல்கள் எழுதி கதையின் நாயகனாகவும் மாஸ் ரவி பூபதி நடித்து இயக்கி உள்ளார். கதாநாயகிகளாக லட்சுமி பிரியா, மஞ்சுளா ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் சூப்பர் சுப்பராயன், சாய் தீனா, சத்யா, கல்லூரி வினோத், ஆதித்யா கதிர், தங்கதுரை, பவர் ஸ்டார், கபாலி விஸ்வந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

ஜி.கே.வி இசையமைக்கும் இப்படத்திற்கு ராஜதுரை மற்றும் சுபாஷ் N மணியன் ஒளிப்பதிவு செய்கிறார்கள். காற்றை யாரும் பார்க்க முடியாது, உணர மட்டும்தான் முடியும். காதல் கருப்பா சிவப்பா பார்க்க முடியாது, சுவாசிக்க தான் முடியும். இரண்டு பேருக்குள் நடக்கும் உண்மையான காதலை சுற்றி படம் உருவாகியுள்ளது.

வடசென்னை பின்னணியில் தற்போது சமூக வலைத்தளத்தில் இளம் பெண்கள் வாழ்க்கை எப்படி சீரழிகிறது என்பதை சுட்டிக்காட்டும் வகையில் படமாக்கி இருக்கிறார்கள். ரசிகர்களுக்கு ஏற்ப காதல், காமெடி, ஆக்சன், திரில்லர், எமோஷனல் என கமர்ஷியல் அம்சத்துடன் திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி, கேரளா போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.

From Around the web