கோஸ்டி படத்தில் பேயாக நடிக்கும் காஜல் அகர்வால்!
                                    
                                     
                                    
                                தமிழில் தனது கவர்ச்சியான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை பெற்றிருப்பவர் நடிகை காஜல் அகர்வால். ‘பொம்மலாட்டம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர். இதற்குள் எல்லா பெரிய கதாநாயகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார் என்பதுகுறிப்பிடத்தக்கது.காஜல் அகர்வால் திருமணத்துக்கு பிறகும் அவர் படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது ‘கோஸ்டி’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.. இந்த படத்தில் அவருக்கு பேய் வேடம். இந்த வேடத்திற்காக அவர் 4 மணி நேரம், ‘மேக்கப்’ போட்டு நடித்து வருகிறார். வீட்டிலேயே ஹோம்வொர்க் செய்து நடித்து ஒத்திகை பார்த்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த கதாபாத்திரத்துக்காக காஜல் தன்னை தயார்படுத்திக் கொண்ட விதம், அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியதாக படக்குழு தெரிவித்துள்ளது. “என் திரையுலக வாழ்க்கையில், ‘கோஸ்டி’ படம் ஒரு மைல் கல்லாக இருக்கும்” என காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.இந்தப் படத்தின் இயக்குனர் ‘குலேபகாவலி’ படத்தை இயக்கிய எஸ்.கல்யாண். சுதன் சுந்தரம், ஜி.ஜெயராம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.
 - cini express.jpg)