”முக்கிய அறிவிப்புக்காக காத்திருங்கள்” விசேஷ செய்தியுடன் காஜல் அகர்வால்..!

 
கணவருடன் காஜல் அகர்வால்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால் விரைவில் நல்ல செய்தி சொல்லவுள்ளதாக தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கும் மும்பையைச் சேர்ந்த கவுதம் கிச்சுலு என்கிற தொழிலதிபருடன் திருமணம் நடந்தது. தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

அதை அவர் இதுவரை மறுக்கவும் இல்லை. மேலு நாகர்ஜூனாவுடன் அவர் நடிக்க இருந்த படத்தில் இருந்து காஜல் அகர்வால் விலகியுள்ளார். இதனால் அவர் கர்ப்பமாகவுள்ள செய்தி உறுதியாகியுள்ளதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் விரைவில் முக்கிய அறிவிப்பு வெளியாகவுள்ளது. அதற்காக காத்திருங்கள் என்று சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் தான் கர்ப்பமாக இருப்பதை தான் அவர் அறிவிக்கவுள்ளதாக ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 

From Around the web