‘இந்தியன் 2’ படத்தில் இருந்து காஜல் நீக்கம்.. காரணம் என்ன?

 
1

லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. இதில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.  

இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்த நிலையில் படப்பிடிப்பு அரங்கில் ஏற்பட்ட விபத்து காரணமாக நிறுத்தப்பட்டது. இறுதியாக லைகா நிறுவனத்துக்கும், ஷங்கருக்கும் மோதல் உருவானது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இருவரும் சமரசம் செய்துக் கொள்வதாக தெரிவித்ததால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

தற்போது வரை ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது உறுதியாகவில்லை. இதனிடையே, தெலுங்கில் ராம்சரண் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். தில் ராஜு தயாரித்து வரும் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.

‘இந்தியன் 2’ படத்துக்கு புதிய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட காஜல் அகர்வால், தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இதனால் அவர் ஒப்புக் கொண்ட படங்களில் எல்லாம் வேறு நாயகிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார்கள்.

அந்த வரிசையில், ‘இந்தியன் 2’ படத்திலும் இன்னும் காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்னும் படமாக்கி முடிக்கப்படவில்லை. ஆகையால் அவருக்குப் பதிலாக வேறொரு நாயகி நடிக்கவுள்ளார். யார் நடிக்கவுள்ளார் என்பது இன்னும் முடிவாகவில்லை. இதுவரை காஜல் அகர்வாலை வைத்து படமாக்கப்பட்ட காட்சிகள் அனைத்தையுமே மீண்டும் படமாக்க முடிவு செய்துள்ளது படக்குழு.

காஜல் அகர்வால் மாற்றம் தொடர்பாக, ‘இந்தியன் 2’ படக்குழுவினர் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள் எனத் தெரிகிறது.

From Around the web