அதிர்ச்சி தந்த கஜோல்- குழம்பிபோன ரசிகர்கள்..!!

சமூகவலைதளத்தில் பாலிவுட் நடிகை கஜோல் பதிவிட்ட தகவல், ரசிகர்களை குழப்பமடையச் செய்துள்ளது. இதுகுறித்த தகவல்களை விரிவாக பார்க்கலாம். 
 
kajol

இந்தி சினிமாவில் ஹீரோயினாக கொடிக்கட்டி பறந்த நடிகை கஜோல், தற்போதும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இந்தியைத் தவிர்த்து இவர் தமிழ் படங்களில் மட்டும் நடித்துள்ளார். 1999-ம் ஆண்டு ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான மின்சார கனவு படத்தில் நடித்தார்.

அதை தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு வெளியான வி.ஐ.பி 2 படத்தில் நடித்தார். இவருடைய கணவர் பாலிவுட் சினிமாவின் பிரபல இயக்குநர் மற்றும் நடிகரான அஜய் தேவ்கன் ஆவார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களுடைய மகளான நைசா தேவ்கனின் சோஷியல் மீடியா பதிவுகள் ஏற்கனவே பிரபலமாக உள்ளன. அவர் திரைப்படங்களில் கூட நடித்தது கிடையாது. எனினும் அவர் செலிப்ரிட்டியாகவே மும்பை ஊடகங்களால் பார்க்கப்படுகிறார். 

kajol family

அண்மையில் அவர் மிகவும் கிளாமராக உடை அணிவதாகவும், இரவுப் பார்ட்டிகளுக்கு சென்று மது அருந்திவிட்டு வருவதாகவும் பல செய்திகள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பரவி வந்தன. அதுகுறித்து இதுவரை நைசா உள்ளிட்ட கஜோல் குடும்பத்தினர் யாரும் பதில் கொடுத்தது கிடையாது.

இந்நிலையில் நடிகை கஜோல் சமூகவலைதளங்களில் இருந்து சிறுது காலம் விலகுகிறேன். எனது வாழ்க்கையில் மிகவும் துன்பமான காலக்கட்டத்தில் இப்போது நான் இருக்கிறேன் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதனால் பாலிவுட் ரசிகர்கள் மிகவும் குழப்பம் அடைந்துள்ளனர். அவருடைய பதிவுக்கு கீழ், கஜோலுக்கு என்ன ஆச்சு என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

kajol

மகளை குறித்து சமூகவலைதளங்களில் வெளியாகும் செய்திகளால் கஜோல் மிகவும் கவலை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கணவர் அஜய் தேவ்கனுடன் அவ்வப்போது சண்டை ஏற்படுவதாகவும் சொல்லப்படுகிறது. தனது குடும்ப வாழ்க்கையை நிம்மதியாக மாற்றிக்கொள்ளவே கஜோல் சமூகவலைதளங்களுக்கு இடைவேளை கொடுத்துள்ளதாக ஊகிக்கப்படுகிறது.  

From Around the web