’காலா’ நாயகி ஈஸ்வரி ராவின் கணவர் இந்த பிரபலமா..??
 

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘காலா’ படத்தில் கதாநாயகியாக நடித்த ஈஸ்வரி ராவின் கணவர் குறித்த விபரங்கள் வெளியாகி அனைவரையும் ஆச்சரியமடையச் செய்துள்ளது.
 
eashwari rao

பா. ரஞ்சித் இயக்கத்தில் 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘காலா’. ரஜினிகாந்த், ஈஸ்வரி ராவ், ஹியூமா குரோஷி, சமுத்திரகனி உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். தனுஷ் தயாரிப்பில் வெளியான இந்த படம், வணிக ரீதியாகவும் விமர்சகர்கள் வட்டத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது.

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு காலா படத்தில் ஈஸ்வரி ராவ் நடித்தது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. அவருடைய நடிப்பும் உடல்மொழியும் பலரை கவர்ந்தன. அதை தொடர்ந்து தற்போது மீண்டும் சினிமாவில் பிஸியாக நடிக்க துவங்கியுள்ளார். குறிப்பாக தெலுங்கு சினிமாவில் ஈஸ்வரி ராவ் பிஸியாக உள்ளார்.

l. raja

இந்நிலையில் இவருடைய குடும்பத்தினர், குழந்தைகள் உள்ளிட்டோரின் விபரங்கள் தெரியவந்துள்ளன. நடிகை ஈஸ்வரி ராவின் கணவர் எல். ராஜா என்பவர். இவர் ஆரம்பத்தில் குரு, சொந்தக்காரன், தரைமேல் ஆணை, குற்றவாளி போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

மேலும் சில சின்னத்திரை தொடர்களையும் அவர் இயக்கியுள்ளார். தற்போது ஒளிப்பரப்பாகி வரும் சுந்தரி, தென்றல் வந்து என்னை தொடு போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன. தற்போது இவர் தான் நடிகை ஈஸ்வரி ராவின் கணவர் என்று தெரிந்ததும், ரசிகர்கள் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

From Around the web