கலக்கல் காமெடி கிங் கவுண்டமணியின் அடுத்த படம் ரெடி.. டைட்டில் என்ன தெரியுமா ?
Jun 10, 2024, 06:35 IST

60 வருடங்களாக சிறந்த நடிகராக விளங்கி வரும் இவர், நகைச்சுவை கேரக்டர் மட்டுமில்லாமல் குணசித்திரம், வில்லன், ஹீரோ என பல பரிமாணங்களில் மக்களை மகிழ்வித்தவர் காமெடி கிங் கவுண்டமணி.அந்த காலத்தில் எல்லாம் ஒரு படத்தில் நடிக்கும் ஹீரோவின் கால்ஷீட் வாங்குவதற்கு முன்னர் கவுண்டமணியின் கால்ஷீட் முதலில் வாங்கி விடுவார்களாம். இவர் வருடத்திற்கு 25 படத்திற்கு மேற்பட்ட படங்களில் நடித்து சாதனையும் படைத்துள்ளார்.
இந்த நிலையில், சாய் ராஜகோபால் இயக்கத்தில் உருவாகியுள்ள ஒத்த ஓட்டு முத்தையா என்ற படத்தில் கவுண்டமணி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது.
இந்த திரைப்படத்தில் மொட்டை ராஜேந்திரன், ஜோகி பாபு உள்ளிட்ட பலர் கவுண்டமணி உடன் இணைந்து நடித்துள்ளார்கள். தற்போது குறித்த போஸ்டர் வைரலாகி வருகின்றது.