அனிருத்துக்கு காரை பரிசளித்த கலாநிதி மாறன்..!

 
1

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 2 தோல்விப் படங்களைத் தொடர்ந்து ஒரு பெரும் வெற்றி தேவையாக இருந்தது என்று பலரும் சொல்லி வந்தனர்…அந்த வெற்றியை ‘ஜெயிலர்’ பெற்றுக் கொடுத்துள்ளது. உலகம் முழுவதும் ரூ.600 கோடி வசூலை தாண்டி உள்ள இப்படம் ‘விக்ரம்’, ‘பொன்னியின் செல்வன்’ ரெக்கார்டுகளை முறியடித்தது.

இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் இருக்கும் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அண்மையில் நடிகர் தலைவர் ரஜினிகாந்துக்கு செக் ஒன்றை பரிசளித்தார்…அடுத்து BMW X7 கார் ஒன்றையும் கொடுத்தார்…

அடுத்து நெல்சனுக்கும் செக் கொடுத்தவர், Porsche காரை அன்பளிப்பாக கொடுத்தார் இந்த வீடியோ எல்லாமே இணையத்தில் வைரல் ஆகி இருந்தது என்றே சொல்லலாம்.

அந்த வகையில் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமான அனிருத்தை சந்தித்து படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் செக் ஒன்றை கொடுத்துள்ளார்..அவர்களை போல ஒரு கார் கொடுத்துள்ளார் இந்த வீடியோவும்  இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


 

From Around the web