தனுஷ் படத்தில் பிரபல வாரிசு நடிகர்..!!

அடுத்ததாக தனுஷ் நடிக்கவுள்ள புதிய பிரபல நடிகரின் மகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதுதொடர்பான தகவலை அவரே உறுதி செய்துள்ளார்.
 
dhanush

தமிழ் சினிமாவில் முதல்நிலை நடிகர்களில், தவிர்க்க முடியாத இடத்தில் இருப்பவர் தனுஷ். இவருடைய எதிர்வரும் சினிமாக்கள் அனைத்தும் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

இதையடுத்து அவர் லோகேஷ் கனகராஜ், மாரி செல்வராஜ், செல்வராகவன் உள்ளிட்ட இயக்குநர்களுடன் பணியாற்றுவார் என்று தகவல்கள் வெளியாகின. அதன்படி, சமீபத்தில் தன்னுடைய வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் மாரி செல்வராஜ் உடன் இணைந்து பணியாற்றுவதை தனுஷ் உறுதி செய்தார்.

அதை தொடர்ந்து தமிழில் தனுஷின் 50-வது படம் தொடர்பான அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதை செல்வராகவன் அல்லது லோகேஷ் கனகராஜ் இயக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும், இதை இன்னும் தனுஷ் தரப்பில் உறுதி செய்யவில்லை. 

kalidas jayaraman

இந்நிலையில் நடிகர் ஜெயராமின் மகனும் நடிகருமான காளிதாஸ் ஜெயராம் சமீபத்தில் அளித்த பேட்டியில், தனுஷின் 50-வது படத்தில் நடிக்கிறேன். அது மிகவும் முக்கியமான கதாபாத்திரம் என்று கூறியுள்ளார். பெரியளவில் தனுஷின் 50-வது படம் உருவாகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நடிகர் காளிதாஸ் ஜெயராம், மலையாளம் மற்றும் தமிழில் கவனம் செலுத்தி வருகிறார். அதிலும் அவர் தமிழில் தான் முழு கவனத்துடன் செயல்பட்டு வருகிறார். தமிழில் மெகா ஹிட்டடித்த விக்ரம் 2 படத்தில் கமல்ஹாசனுக்கு மகனாக, காளிதாஸ் ஜெயராம் நடித்தார். அதை தொடர்ந்து இந்தியன் 2 படத்திலும் காளிதாஸ் ஜெயராமன் கமலுடன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

From Around the web