ரஜினி படத்தில் காளிதாஸ் ஜெயராம்..!
மலையாளம் மற்றும் தமிழில் தயாராகும் புதிய படத்தில் காளிதாஸ் ஜெயராம் ஹீரோவாக நடிக்கவுள்ளார். தற்போது இந்த படத்தின் மலையாளப் பதிப்பின் முதல் பார்வை போஸ்டர் சமூகவலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் ஜெயராமின் மகனான காளிதாஸ் ஜெயராம் மலையாள திரையுலகைவிட தமிழில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சென்னையில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கவே அவருக்கு ஆர்வம் அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் பல்வேறு ஓ.டி.டி தளங்களால் தயாரிக்கப்பட்ட ஆந்தாலாஜி படங்களில் காளிதாஸ் ஜெயராமன் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அவருடைய நடிப்பின் காரணமாகவே அந்த படங்கள் ரசிகர்களிடம் பாராட்டுக்களை பெற்றன.
தற்போது வினில் வர்கீஸ் என்பவர் இயக்கும் மலையாளப் படத்தில் காளிதாஸ் ஜெயராமன் நடிக்கிறார். இந்த படத்தின் மலையாள பதிப்புக்கு ’ரஜினி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் பதிப்புக்கான தலைப்பு இன்னும் தேர்வு செய்யப்படவில்லை.
இந்த படத்தில் நமீதா பிரமோத், ரெபோ மோனிகா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். நகைச்சுவை நடிகர் கருணாகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக துவங்கியுள்ளது.
 - cini express.jpg)