மீண்டும் கமல் உடன் நடிக்கும் காளிதாஸ் ஜெயராம்- அதுவும் இந்த படத்தில்.!!

மீன் குழம்பும் மண் பானையும், விக்ரம் படங்களை தொடர்ந்து மீண்டும் கமல்ஹாசனுடன் காளிதாஸ் ஜெயராம் இணைந்து நடிக்கவுள்ளார்.
 
kaalidas jayaram

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். சித்தார்த், காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரகனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில்

கடந்த 1996-ம் ஆண்டு வெளியான ‘இந்தியன்’ படத்தின் தொடர் பாகமாக இப்படம் தயாராகி வருகிறது. இதுவரை சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. தற்போது இந்தியன் 2 படக்குழு தென்னாப்ரிக்கா ஜோகன்னஸ்பர்க்கிற்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் புதிய வரவாக, காளிதாஸ் ஜெயராமன் நடிக்கிறார். ஏற்கனவே இவர் கமல்ஹாசனுடன் மீன் குழம்பும் மண்பானையும், விக்ரம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இரண்டுமே அவருக்கு வரவேற்பு பெற்ற கதாபாத்திரங்களாக அமைந்தன.

அந்த வரிசையில் இந்தியன் 2 படத்திலும் காளிதாஸ் ஜெயராமின் கதாபாத்திரம் மக்களை கவரும் என்று சொல்லப்படுகிறது. சுமார் ரூ. 250 கோடி மதிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தை நடப்பாண்டில் வெளியிட படக்குழு முனைப்பு காட்டி பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

From Around the web