இன்று வெளியாகிறது கல்கி 2898 ஏடி படத்தின் ட்ரைலர்..!

இந்திய திரையுலகில் இருக்கும் பேமஸ் ஆன நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் பிரபாஸ் . இவரது நடிப்பில் தற்போது மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் தான் கல்கி 2898 AD .ரூ.600 கோடி பட்ஜெட்டில் இரண்டு பாகமாக உருவாகும் இப்படத்தில் நடிகர்கள் ராணா டக்குபதி, கமல்ஹாசன், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
முன்னதாக ‘கல்கி 2898 ஏடி’ படத்தில் நடிகர் பிரபாஸின் பெயர் பைரவா எனக் குறிப்பிட்டு படக்குழு போஸ்டரை வெளியிட்டதுடன் இப்படம் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். நடிகர் கமல்ஹாசன் இப்படத்தின் முதல் பாகத்தில் 20 நிமிடங்களும் இரண்டாம் பாகத்தில் 90 நிமிடங்களும் வருகிறாராம். இதனால், இப்படத்தின் வில்லன் கமல்ஹாசனாகத்தான் இருக்கும் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் படத்தின் டிரைலர் ஜூன் 10 அன்று வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்ததைத் தொடர்ந்து, இன்று அந்தப் படத்தில் நடித்துள்ள நடிகை தீபிகா படுகோனின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படம் ஜூன் 27 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
மேலும் இந்த படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகிறது
𝟏 𝐃𝐀𝐘 𝐓𝐎 𝐆𝐎!#Kalki2898AD Trailer out Tomorrow.@SrBachchan @ikamalhaasan #Prabhas @deepikapadukone @nagashwin7 @DishPatani @Music_Santhosh @VyjayanthiFilms @Kalki2898AD @saregamaglobal @saregamasouth #Kalki2898ADonJune27 pic.twitter.com/bGFNBAKWmx
— Kalki 2898 AD (@Kalki2898AD) June 9, 2024