கல்யாணம் தான் நமக்கு மிக பெரிய பாதுகாப்பு - வைரலாகிவரும் ‘கண்ணகி’ பட ட்ரைலர்!

 
1

பல மாப்பிள்ளைகள் வந்து பெண் பார்த்தும் கல்யாணம் ஆகாமல் இருக்கும் அம்மு அபிராமி, கல்யாணம் ஆகி விவாகரத்து கேட்கும் கணவருக்கு விவாகரத்து தர முடியாது என்று கூறும் வித்யா பிரதீப், கல்யாணத்தை விளையாட்டாக எடுத்துக் கொள்ளும் ஷாலினி மற்றும் கல்யாணம் ஆகி கர்ப்பமாகி இருக்கும் கீர்த்தி பாண்டியன் கர்ப்பத்தை கலைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஆகிய நான்கு வித்தியாசமான கோணங்களில் உள்ள பெண்கள் எடுக்கும் முடிவுதான் இந்த படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, ஷாலின் மற்றும் வித்யா பிரதீப் ஆகிய நான்கு முக்கிய கேரக்டர்கள் நடித்திருக்கும் இந்த படத்தில் மயில்சாமி உள்பட பலர் நடித்துள்ளனர்.

யஷ்வந்த் கிஷோர் இயக்கத்தில் ஷான் ரகுமான் இசையில் உருவான இந்த படம் டிசம்பர் 15ஆம் தேதி திரையில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் உள்ள நான்கு பெண் கேரக்டர்களும் அழுத்தமாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் நிச்சயம் இந்த படம் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web