இந்தியன் 2 கிளிம்ப்ஸ் பார்த்துவிட்டு கமல்ஹாசன் செய்த காரியம்..!!

இதுவரை எடுக்கப்பட்ட இந்தியன் 2 படத்தின் சில கிளிம்ப்ஸ் காட்சிகளை பார்த்துவிட்டு இயக்குநர் ஷங்கருக்கு அன்புப் பரிசு வழங்கியுள்ளார் கமல்ஹாசன்.

 
kamal haasan

தமிழில் 1996-ம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் இரண்டாவது பாகத்தை 22 ஆண்டுகள் கழித்து ஷங்கர் இயக்கி வருகிறார். முதல் பாகத்தில் நடித்த கமல்ஹாசன் தான் இரண்டாவது பாகத்திலும் கதாநாயகனாக நடிக்கிறார்.

அவருடன் எஸ்.ஜே. சூர்யா, குரு சோமசுந்தரம், ப்ரியா பவானிசங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங்க் சென்னை, பாண்டிச்சேரி, ஹைதராபாத், வட இந்தியாவின் சில பகுதிகள், தென் ஆஃப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் படமாக்கப்பட்டு வருகிறது.

அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளன. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன், இதுவரை எடுக்கப்பட்ட இந்தியன் 2 படத்தில் இருந்து சில கிளிம்ப்ஸ் காட்சிகளை பார்த்ததாகவும், இயக்குநர் ஷங்கர் சிற்ப்பான பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக ட்விட்டரில்," இந்தியன் 2’ படத்தின் பிரதான காட்சிகளை இன்று பார்த்தேன். என் உளமார்ந்த வாழ்த்துகள் ஷங்கர். இதுவே உங்கள் உச்சமாக இருக்கக் கூடாது என்பதும் என் அவா. காரணம், இதுதான் உங்கள் கலை வாழ்வின் மிக உயரமான நிலை. இதையே உச்சமாகக் கொள்ளாமல் திமிறி எழுங்கள். பல புதிய உயரங்கள் தேடி. அன்பன் கமல்ஹாசன்" என்று கமல் பதிவிட்டுள்ளார்.


.மேலும் அந்த பதிவில் ஷங்கருக்கு நினைவுப் பரிசு ஒன்றை வழங்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். அதை பார்க்கும் போது ஷங்கருக்கு ஒரு விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை கமல் பரிசளித்துள்ளது போல தெரிகிறது. இந்த பதிவை அடுத்து இந்தியன் 2 படத்தின் மீது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

From Around the web