விக்ரமை வைத்து மருதநாயகத்தை தூசி தட்டும் கமல்..!!

கமல்ஹாசனுக்கு பதிலாக விக்ரமை வைத்து ‘மருதநாயகன்’ படத்தின் எஞ்சிய காட்சிகள் படமாக்கப்பட திட்டமிடப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
kamal haasan

மிக பிரமாண்டமான பொருட்செலவில் 1997-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட படம் ‘மருதநாயகம்’. இந்த படத்தின் பூஜைக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். அவருடன் அப்போதைய முதல்வர் கருணாநிதி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

படம் ஆரம்பிக்கப்பட்ட சில மாதங்களில் 40 நிமிடக் காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. ஆனால் நிதிப் பற்றாக்குறை காரணமாக ‘மருதநாயகம்’ படம் கைவிடப்பட்டது. தற்போது பாகுபலி, பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று படங்களுக்கு கிடைத்து வரும் வரவேற்பு கமல்ஹாசனை ஊக்கப்படுத்தியுள்ளது.

இதனால் 36 ஆண்டுகளுக்கு பிறகு அவர் மீண்டும் மருதநாயகம் படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி தனக்கு பதிலாக விக்ரமை அந்த படத்தில் நடிக்க வைக்க அவர் விரும்புகிறார். ஏற்கனவே ஷூட்டிங் செய்யப்பட்ட 40 நிமிடக் காட்சிகளும் படத்தில் இருக்குமாம். 

அதேசமயத்தில் புதிய படக்குழுவை வைத்து மீதமுள்ள காட்சிகள் படமாக்கப்படுகிறது. அதற்கு தகுந்தார் போல திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் தெரிவிக்கின்றன.
 

From Around the web