உறுதியளித்து 9 வருடங்கள் ஆகியும் எந்த பதிலும் கமலஹாசன் அளிக்கவில்லை : லிங்குசாமி ஆதங்கம்..! 

 
1

உலக நாயகன் கமலஹாசனின் பேச்சு மற்றும் நடிப்பிற்கேன்று தனி ரசிகர் பட்டாளங்கள் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதோடு ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் இவர் நடத்தி வருகிறார். அதுமட்டுமின்றி 2018 ஆம் ஆண்டு மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தி அதில் தனது கட்சி பெயர் மற்றும் கொடியை வெளியிட்டார். அன்றிலிருந்து தமிழகத்தில் நடக்கும் பொது தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல்களில் களமிறங்கி வரும் கமல் குறிப்பிடத்தக்க வெற்றியை கூட பெறவில்லை. 


இதனால் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த கமலஹாசன் விக்ரம் இரண்டாம் பாகத்தில் நடித்து நல்ல வரவேற்பையும் வெற்றியையும் கண்டார். அதே சமயத்தில் தொடர்ச்சியாக அரசியலில் தோல்வியை சந்தித்து வந்த கமலஹாசனுக்கு 2026 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் ஒரு முக்கிய தேர்தலாக அமையும் என்று பார்க்கப்பட்டது! ஆனால் இந்த தேர்தலில் கமலஹாசன் யாரும் எதிர்பாத்திடாத ஒரு முடிவை எடுத்து திமுகவுடன் கூட்டணியில் இணைந்தார். இதற்கு கமலஹாசனை நோக்கி பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது...இதற்காக டிவி' யல்லாம் உடைக்கணுமா!! என்ற பல கேள்விகளும் கிண்டல்களும் கமலஹாசனை சுற்றி சூழ அவரது முடிவு அவரின் ரசிகர்கள் பலருக்கே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கமல் மீது பிரபல முன்னணி இயக்குனர் பெரும் குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார். அதாவது 2001 ஆம் ஆண்டு ஆனந்தம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமான லிங்குசாமி பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உள்ளவர். 

இவர் இயக்கியதில் ரன், சண்டக்கோழி, பையா, வேட்டை மற்றும் அஞ்சான்  ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர் லிங்குசாமி ஒரு இயக்குனர் மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் திருப்பதி ப்ரொடக்ஷன் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார். அப்படியே அவர் தயாரித்த பல படங்களில் தீபாவளி, பட்டாளம், வழக்கு எண் 18 கீழ் 9, ரஜினி முருகன் ஆகிய படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் லிங்குசாமிக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. இந்த வரிசையில் கடந்த 2015 ஆம் ஆண்டு உலகநாயகன் கமலஹாசனை வைத்து லிங்குசாமி உத்தம வில்லன் என்ற படத்தை வெளியிட்டு இருந்தார் ஆனால் இந்த படம் வெளியான சமயத்தில் பல தோல்விகளையும் வசூல் ரீதியாக பெரும் நஷ்டத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது. அப்படி உத்தம வில்லன் படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்வதற்காக லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு படம் நடித்துக் கொடுப்பதாக கமலஹாசன் உறுதியளித்துள்ளார்.

ஆனால் உறுதியளித்து ஒன்பது வருடங்கள் ஆகியும் இதுகுறித்து எந்த பதிலும் கமலஹாசன் அளிக்கவில்லை என்றும் படம் குறித்த பேச்சு அவர் எடுக்கவில்லை என்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் கமலஹாசன் மீது லிங்குசாமி புகார் அளித்துள்ளார். அதாவது ஒன்பது வருடங்கள் ஆகியும் எந்த பதிலும் அளிக்காத நடிகர் கமலஹாசன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒப்புக்கொண்டபடி தயாரிப்பாளர் சங்கம் அவருடன் பேச்சுவார்த்தையை மேற்கொண்டு எங்களுக்கு விருப்பமான கதையில் அவர் நடித்து தயாரித்து தருவதற்கு கால் ஷீட்டை பெற்று தர வேண்டும் என்றும் திருப்பதி பிரதர்ஸ் சார்பாக லிங்குசாமி தயாரிப்பாளர் சங்கத்தில் அளித்த மனுவில் குறிப்பிட்டார். இந்த விவகாரம் கோலிவுட் வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

From Around the web