பா.ரஞ்சித் இயக்கத்தில் கமல்ஹாசன்..?

 
1

நடிகர் கமல்ஹாசன் தனது 67-வது பிறந்தநாளை கடந்த 7-ந் தேதி கொண்டாடினார். அப்போது கமல்ஹாசனை பா.ரஞ்சித் சந்தித்து, ஒரு கதை சொன்னாராம். அந்த கதை கமல்ஹாசனுக்கு பிடித்துப்போனதாக தெரிகிறது.

“படத்தை உடனே பண்ணலாம்... எப்போது படப்பிடிப்பை வைத்துக்கொள்ளலாம்?” என்று பா.ரஞ்சித்திடம் கமல்ஹாசன் கேட்டாராம். அவர் இப்போது, ‘விக்ரம்-2’ படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இதையடுத்து, ‘இந்தியன்-2’ படத்தில் நடிக்கிறார்.

2 படங்களையும் முடித்துக்கொடுத்துவிட்டு, பா.ரஞ்சித் படத்துக்கு கமல்ஹாசன் வருவார் என்று கூறப்படுகிறது. அவர் கொடுத்த விருந்தில், பா.ரஞ்சித் கலந்து கொண்டார்.

From Around the web