பிக்பாஸ் சீசன் 5 தொகுப்பாளரும் கமல்ஹாசன் தான்..!

 
நடிகர் கமல்ஹாசன்

தமிழக தேர்தலில் தோல்வி அடைந்ததால் நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கமாட்டார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் முன்னாள் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகி ஒருவர்.

தமிழ் தொலைக்காட்சி பார்வையாளர்கிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்று வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த 4 சீசன்களையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்தாண்டு விரைவில் பிக்பாஸ் சீசன் 5 தொடங்கப்படவுள்ளது. அதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் தோல்வியை தழுவினார். அதனால் அவர் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கமாட்டார் என்று தகவல்கள் வெளியாகிவந்தன. 

சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து வெளியேறிய நிர்வாக ஒருவர் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அதில், நடிகர் கமல்ஹாசன் ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முன்பணம் வாங்கிவிட்டதாக கூறினார். அதை அப்போதே அவர் தேர்தல் பணிக்காக கட்சி செலவுக்கு கொடுத்தவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்மூலம் பிக்பாஸ் 5 நிகழ்ச்சியையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவது உறுதியாகியுள்ளது. இது அவருடைய ரசிகர்களிடம் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இந்த தகவலை நிகழ்ச்சி நிர்வாகமும் உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

From Around the web