பிரபல மலையாள இயக்குநருடன் இணையும் கமல்ஹாசன்..!

 
கமல்ஹாசன் மற்றும் மகேஷ் நாராயணன்

மலையாள சினிமாவின் பிரபல தொழில்நுட்பக் கலைஞர் மற்றும் இயக்குநர் ஒருவருடன் கமல்ஹாசன் இணைந்து பணியாற்றவுள்ளதை சமீபத்திய பேட்டியொன்றில் உறுதி செய்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தை முடித்தவுடன் ஷங்கர் இயக்கத்தில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள ‘இந்தியன் 2’ படத்தின் நடிக்கிறார் கமல். இதனுடைய படப்பிடிப்பு பணிகள் 60 சதவீதம்வ் வரை நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றனர்.

விக்ரம் மற்றும் இந்தியன் 2 படங்களுக்கு பிறகு கமல்ஹாசன் பணியாற்றும் படத்தை பற்றி அவரே தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமீபத்தில் அவர் அளித்த நேர்காணலில் மலையாள சினிமாவைச் சேர்ந்த மகேஷ் நாராயணனுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக கூறினார்.

மலையாளத்தில் வெளியான டேக் ஆஃப், சி யூ சூன், மாலிக் போன்ற படங்களை இயக்கியவர் தன மகேஷ் நாராயணன். மேலும் தென்னிந்தியாவின் முன்னணி திரைக்கதை ஆசிரியர் மற்றும் படத்தொகுப்பாளராகவும் உள்ளார்.

கமல்ஹாசன் இயக்கத்தில் வெளியான ‘விஸ்வரூபம்- 1’ மற்றும் ’விஸ்வரூபம்- 2’ ஆகிய படங்களுக்கு இவர் தான் படத்தொகுப்பு செய்தார். அதன்படி அடுத்ததாக மகேஷ் நாராயணன் இயக்கும் படத்துக்கு கமல்ஹாசன் திரைக்கதை எழுதவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

From Around the web