கமல்ஹாசன், மணிரத்னம் படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்..!!

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் நடப்பாண்டு தீபாவளி அல்லது அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் ஷூட்டிங் நடந்து வருவதால் எதையும் உறுதியாக சொல்ல முடியவில்லை.
இந்தியன் 2 படத்துக்கு பிறகு கமல் நடிக்கும் படத்தை மணிரத்னம் இயக்குகிறார். இது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் 234-வது படமாகும். தற்போது படத்துக்கான திரைக்கதை எழுதும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அடுத்தாண்டு பிப்ரவரி முதல் KH234 படத்திற்கான ஷூட்டிங் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் இந்தி நடிகை வித்யா பாலன் கதாநாயகியாக நடிக்கிறார். எனினும் இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் த்ரிஷா அல்லது நயன்தாரா நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயிண்டு மூவிஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.