இந்திரஜா மகனுக்கு பெயர் வைத்த கமல்ஹாசன்..! 

 
1

விஜய் டிவியில் கிடைத்த புகழை தொடர்ந்து அவர் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார் ரோபா சங்கர்.. தற்போது பல்வேறு திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார்.

ரோபோ சங்கரின் மகள் பெயர் இந்திரஜா. இவர் நடிகர் விஜயின் ‛பிகில்' திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். இந்திரஜாவுக்கும், உறவினர் கார்த்திக் என்பவருக்கும் திருமணம் நடந்தது.இந்திரஜா கர்ப்பமானார். அவருக்கு கடந்த ஜனவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இதனால் ரோபா சங்கர் தாத்தாவானார். குழந்தை பிறந்தை அவர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிலையில் தான் இந்திரஜாவின் குழந்தைக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பெயர் வைத்துள்ளார்.

ரோபா சங்கரின் பேரனான இந்திரஜாவின் மகனுக்கு கமல்ஹாசன் ‛நட்சத்திரன்' என்று பெயர் வைத்திருக்கிறார். நடிகர் கமல்ஹாசனை ரோபா சங்கர் தனது மனைவி, மகள், மருமகன், பேரனுடன் சந்தித்தார். இந்த சந்திப்ப்பை தொடர்ந்து குழந்தைக்கு ‛நட்சத்திரன்' என்று கமல்ஹாசன் பெயர் சூட்டி உள்ளார்.

இதுதொடர்பான போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் இந்திரஜா - கார்த்திக் தம்பதி பதிவிட்டுள்ளார். அதில், ‛‛எங்களுடைய வாழ்க்கையின் அர்த்தமான எங்கள் மகனுக்கு உலக நாயகன், நம்மவர், அன்பு தலைவர், பத்ம பூஷன் டாக்டர் கமல் ஹாசன் ‛நட்சத்திரன்' என பெயரிட்டு வாழ்த்தினார். என்றும் உங்கள் அன்புடன் எங்கள் நட்சத்திரன் கார்த்திக்'' என்று கூறியுள்ளார். முன்னதாக திருமணத்திற்கு பிறகு ரோபோ சங்கர் மகள் இந்திரஜா தனது கணவர் கார்த்திக் உடன் விஜய் டிவியில் நடந்த மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அந்த சமயத்தில் இந்திரஜா கர்ப்பமான பிறகு அவர்கள் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினர். கடந்த ஜனவரி மாதம் குழந்தை பிறந்த நிலையில் இப்போது கமல்ஹாசன் பெயர் சூட்டி உள்ளார்.

மேலும் குழந்தைகளுக்கு பெயர் வைப்பது கமல்ஹாசனுக்கு இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு மக்கள் நீதி மய்யத்தில் செயல்பட்டு வரும் கவிஞரும், பாடலாசிரியருமான சினேகனின் இரட்டை பெண் குழந்தைகளுக்கு சமீபத்தில் கமல்ஹாசன் பெயர் வைத்தார். சினேகன் - கன்னிகா காதல் திருமணம் செய்தனர். இந்த தம்பதிக்கு இரட்டை குழந்தை பிறந்தது. அதில் ஒரு குழந்தைக்கு ‛காதல்' என்றும் இன்னொரு குழந்தைக்கு ‛கவிதை' என்றும் கமல்ஹாசன் பெயர் சூட்டி தங்க வளையல் அணிவித்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

From Around the web