பிரபாஸுக்கு வில்லனாகும் கமல்ஹாசன்- ரூ. 20 கோடி டிமாண்ட்..?

பிரபாஸ், தீபிகா படுகோன் நடித்து வரும் ப்ராஜெக்ட் கே படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கமல்ஹாசனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
 
 
prabhas

தெலுங்கில் வெளியான ‘மகாநடி’ திரைப்படத்தை இயக்கியவர் நாக் அஸ்வின். இவருடைய அடுத்தப் படம் தான் ப்ராஜெக்ட் கே. ரூ. 500 கோடி செலவில் உருவாகும் இந்த படத்தின் கதை ஒரு சன்ஃபிக்‌ஷன் பின்னணியைக் கொண்டது. 

ஒரு பான் இந்திய படமாக தயாராகி வரும் ப்ராஜெக்ட் கே-வில் அமிதாப் பச்சனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கீறார். வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.

இப்படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு படக்குழு கமல்ஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதேசமயத்தில் இந்த படத்தில் நடிப்பதற்காக கமல் தரப்பு ரூ. 20 கோடி சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. எனினும் இந்த தகவலை படக்குழு உறுதி செய்யவில்லை. 
 

From Around the web