என்னுடைய நஷ்டத்திற்கும் கமல் தான் காரணம்: சீனு ராமசாமி..!

 
1
திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பில் இன்று காலை ஒரு அறிக்கை வெளியானது என்பதும் அதில் ’உத்தமவில்லன்’ படம் தங்கள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டத்தை கொடுத்தது என்றும் அந்த நஷ்டத்தின் காரணமாக கமல்ஹாசன் தங்களுடைய நிறுவனத்துக்கு இன்னொரு படம் நடித்து தருவதாக எழுத்துப்பூர்வமாக வாக்குறுதி அளித்திருப்பதாகவும் அதன்படி விரைவில் தங்கள் நிறுவனம் கமல்ஹாசன் படத்தை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட போவதாகவும் தெரிவித்திருந்தது.

ஆனால் வலைப்பேச்சு யூடியூப் சேனல் ‘உத்தமவில்லன்’ திரைப்படம் லாபகரமான படம் என்று தவறான தகவலை கூறி இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி தன்னுடைய ’இடம் பொருள் ஏவல்’ திரைப்படம் ரிலீஸ் ஆகாமல் காலதாமதம் ஆனதிற்கும் ‘உத்தமவில்லன்’ படம் தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவ தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

திரு லிங்குசாமி அவர்கள் தயாரித்த ’இடம் பொருள் ஏவல்’ படம் அவர் தயாரித்த ’உத்தம வில்லன்’ படத்திற்கு முந்தி வந்திருக்க வேண்டிய படம், ஆனால் ’உத்தம வில்லன்’ முந்திவிட்டது. என் படம் நின்று விட்டது.

கமல் அண்ணன் வாக்கு தந்தால் அதை நிறைவேற்றுவார் என்பது  எல்லோருக்கும் தெரியும். அவர் ஒப்பந்தப்படி நிச்சயம் திருப்பதி பிரதர்ஸ்  கம்பெனிக்கு ஒரு படம் செய்வார் என நம்புறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

From Around the web