மணிரத்னம் இல்லை, ஹெச். வினோத் தான்- மறைமுகமாக அறிவித்த கமல்..!!

கமல்ஹாசன் மற்றும் ஹெச். வினோத் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டதை அடுத்து, அவர்களுடைய கூட்டணியில் உருவாகும் படம் விவசாயத்தை மையப்படுத்தியதாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
kamal

இந்தியன் 2 படத்துக்கு பிறகு கமல்ஹாசன்,  ஹெச். வினோத் மற்றும் மணிரத்னம் உள்ளிட்டோரின் இணைந்து பணியாற்றவுள்ளார். அதில் ஏற்கனவே மணிரத்னம் இயக்கும் ‘KH234’ படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது. ஆனால் எப்போது படத்துக்கான படப்பிடிப்பு துவங்கும் என தெரியவில்லை. 

ஆனால் ஒருசில ஊடகங்கள் கமல்ஹாசன் அடுத்ததாக ஹெச். வினோத் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகளை வெளியிட்டன. எனினும், இதுகுறித்து உறுதியான தகவல் எதுவும் தெரியாமல் இருந்து வந்தது. இந்நிலையில் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தில் நடந்த கூட்டத்தில் கமல் மற்றும் ஹெச். வினோத் கலந்துகொண்டனர்.

Maniratnam

அவர்களிடம் பேசிய கமல்ஹாசன் பாரம்பரியமாக இருந்து வரும் நெல் ரகங்களை மீட்பது தொடர்பான ஆலோசனைகளை நடத்தினார். மேலும் அதற்கான பணியில் தான் எப்போதும் துணை இருப்பேன் என்றும் மையத்தைச் சேர்ந்தவர்களிடம் அவர் உறுதி அளித்தார்.

h voinod

இதன்மூலம் அடுத்ததாக ஹெச். வினோத் மற்றும் கமல்ஹாசன் இணைந்து பணியாற்றுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த படம் கமல்ஹாசனின் 233-வது படமாக தயாராகவுள்ளது. தற்போது இந்த விவசாய கூட்டத்தில் அவர்கள் சந்தித்ததை அடுத்து, KH233 படம் விவசாய பின்னணியில் தயாராகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web