கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்கும் பா. ரஞ்சித்..?

 
கமல்ஹாசன் மற்றும் ரஞ்சித்

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் படத்தை பா. ரஞ்சித் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை பார்க்கலாம்.

ரஜினிகாந்த் நடித்த காலா, கபாலி ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் பா. ரஞ்சித் தேசியளவில் கவனமீர்த்தார். அதை தொடர்ந்து ஆர்யா நடிப்பில் அவருடைய இயக்கத்தில் வெளியான ‘சார்பாட்டா பரம்பரை’ மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

நேரடியாக ஓ.டி.டி-யில் வெளியான இந்த படம் தேசியளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதற்கடுத்து ரஞ்சித் என்ன படம் இயக்குவார் என்கிற எதிர்பார்ப்பு நிலவியது. அதன்படி முற்றிலும் புதிய கூட்டணியுடன் இணைந்து ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்கிற படத்தை இயக்குவதாக ஒரு நேர்காணலில் அவர் கூறினார்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் நடுக்கும் அடுத்த படத்தை பா ரஞ்சித் இயக்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கமல்ஹாசன் ‘விக்ரம்’ ‘இந்தியன் 2’ ஆகிய படங்களை முடித்துவிட்ட பிறகும், பா. ரஞ்சித் பிர்ஸா முண்டா மற்றும் நட்சத்திரம் நகர்கிறது ஆகிய படங்களை முடித்துவிட்ட பிறகும் இவ்விருவரும் இணையும் படம் துவங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

From Around the web